டபாஸ்கோ வெண்ணெய்யுடன் சால்மன் மீன் வறுவல் ரெசிபி | Seared Salmon Recipe !





டபாஸ்கோ வெண்ணெய்யுடன் சால்மன் மீன் வறுவல் ரெசிபி | Seared Salmon Recipe !

0
சால்மன் மீனை டாபஸ்கோ பட்டரில் வறுத்து, உருளைக் கிழங்கு சாலட்டுடன் அல்லது உருளைக் கிழங்கு மசியலுடன் பறிமாறலாம்.
சால்மன் மீன் வறுவல் ரெசிபி

தேவையான பொருட்கள்

டபாஸ்கோ பட்டருக்கு தேவையானவை

50 கிராம் வெண்ணெய்

1/2 தேக்கரண்டி டாபாஸ்கோ

1/2 தேக்கரண்டி சைவ்ஸ் , நறுக்கப்பட்ட

உப்பு தேவைக்கேற்ப,

சால்மன் மீனிற்கு

150-200 கிராம் சால்மன் மீன் துண்டுகள்

ஆலீவ் ஆயில்

சுவைக்க உப்பு தேவைக்கேற்ப

எப்படி செய்வது 

இரட்டை கொதி முறையில் வெண்ணெய்யை உருக்கி அதனுடன் டபாஸ்கோ சாஸ், சைவ்ஸ் மற்றும் உப்பு சேர்க்கவும்.

வெண்ணெய்யை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி கட்டியாகும் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

அடி கணமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

அதில் எண்ணெய்யை ஊற்றவும். அதில் மீனின் தோல் பக்கத்தை முதலில் வைத்து 3 நிமிடம் வேக வைக்கவும்.

திருப்பி போட்டு 2 நிமிடம் வேக வைக்கவும். மீனை தட்டில் வைத்து அதன் மேல் செய்து வைத்த டாபஸ்கோ பட்டரை வைக்கவும். உருளைக்கிழங்கு சாலட் அல்லது உருளைக்கிழங்கு மசியலுடன் பறிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)