பொருள் விளங்கா உருண்டை செய்வது | Porul Vilanga Urundai Recipe !





பொருள் விளங்கா உருண்டை செய்வது | Porul Vilanga Urundai Recipe !

0
தேவையானவை:

புழுங்கல் அரிசி – 100 கிராம்,

பாசிப்பருப்பு – 200 கிராம்,

கடலைப் பருப்பு – 4 டீஸ்பூன்,

வெல்லம் – 250 கிராம்,

ஏலக்காய்த் தூள் – சிறிதளவு,

கொப்பரைத் தேங்காய் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப்,

சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை,

நெய் – சிறிதளவு. 

செய்முறை:
பொருள் விளங்கா உருண்டை

வெறும் வாணலியில் புழுங்கல் அரிசியை பொன்னிற மாக வறுக்கவும். பாசிப் பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். கடலைப் பருப்பையும் தனியாக வறுக்கவும். 

பின்பு எல்லா வற்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து சலிக்கவும். வெல்லத்தை நீரில் கரைய விட்டு இளம் பாகாக காய்ச்சவும் (லேசாக உருட்ட வரும் மெழுகு பதம்). 

நறுக்கிய கொப்பரையை நெய் விட்டு வறுத்து, சலித்து வைத்திருக் கும் மாவுடன் சேர்க்கவும்.

சுக்குத் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி, சிறிய உருண்டை களாக உருட்டவும்.
குறிப்பு:

இதில் என்ன பொருள் சேர்த்துள்ளது என்று கண்டு பிடிப்பதே கடினம் என்பதால் தான் இந்த உருண்டைக்கு ‘பொருள் விளங்கா உருண்டை’ என்று பெயர். கெட்டியாக இருப்பதால் ‘கெட்டி உருண்டை’ என்றும் கூறுவார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)