புதினா பரோட்டா செய்வது எப்படி? | Mint Barota Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை :
மைதா மாவு 4 கப்

புதினா 2 கப்

பச்சை மிளகாய் 4

சர்க்கரை (Sugar) 1 தேக்கரண்டி

நெய் 1 மேஜைக் கரண்டி

உப்பு தேவையான அளவு

இதயம் நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்

செய்முறை :
புதினா பரோட்டா செய்வது
மைதா மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும். புதினாவை நறுக்கிக் கொள்ளவும்.

மைதாமாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர், புதினா, அரைத்த பச்சை மிளகாய், நெய், 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் இவற்றை கலந்து, சற்று தளர்த்தி யாக பிசைந்து, 

3 மேஜைக் கரண்டி இதயம் நல்லெண்ணெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து மூடி 6 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

அதன்பின், மாவை உருண்டை களாக செய்து பூரிப்பலகை மீது வைத்து விரல்களால் தட்டி, பலகை அளவு இழுத்து விரிக்கவும். 

விரித்த மாவை மடிப்புகளாக செய்து, நீளமாக ஆனதும், அப்படியே வட்டமாக சுற்றி, அரை அங்குல பருமனாக தட்டிக் கொள்ளவும். தோசைக் கல்லில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பரோட்டாவைப் போடவும். 

சுற்றிலும் சிறிது இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும், பரோட்டா, பொன் நிறமாக சிவந்து, வெந்ததும் எடுக்கவும். இது போல் எல்லா மாவிலும் பரோட்டா தயாரித்து, பரிமாறவும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚