கோதுமை ஜாலர் தோசை செய்வது எப்படி? | Wheat jaler Dosa Recipe !





கோதுமை ஜாலர் தோசை செய்வது எப்படி? | Wheat jaler Dosa Recipe !

0
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - ஒரு கப்

தேங்காய் பால் - ஒரு கப்

தண்ணீர் - தேவைக்கு

மஞ்சள் தூள் - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

முட்டை - 1

கோதுமை ஜாலர் தோசை செய்வது

கோதுமை மாவை சலித்து வைத்து அத்துடன் முட்டை சேர்த்து தேங்காய் பால் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். 

அத்துடன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கட்டி யில்லாமல் நன்கு கலந்து வைத்து வடிகட்டி வைக்கவும்.
இந்த மாவை ஒரு விரும்பிய மாடலில் கோனில் ஊற்றி கொள்ளவும். நான் ஸ்டிக் பேனில் பட்டர் அல்லது நெய் தடவி விரும்பிய மாடலில் கோனில் வைத்து ஊற்றி விடவும். 

திருப்பிப் போட தேவை யில்லை. சுவையான ஜாலர் தோசை ரெடி...
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)