தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ் செய்வது | Watermelon Orange Juice Recipe !





தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ் செய்வது | Watermelon Orange Juice Recipe !

0
தர்பூசணி கோடையில் உடலை குளிர்விக்க மிக மிக அவசியமானது. இன்று தர்பூசணியுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து ஜூஸ் செய்து எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
தர்பூசணி துண்டுகள் – 2 கப்

ஆரஞ்சு – 2

உப்பு – 1 சிட்டிகை

தேன் – 2 டீஸ்பூன்

ஆப்பிள் – பாதி

ஐஸ் கட்டிகள் – சிறிதளவு

அலங்கரிக்க :

ஆப்பிள் துண்டுகள் – 1 டீஸ்பூன்

புதினா இலைகள் – 3
செய்முறை :
தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ் செய்வது

ஆரஞ்சு பழத்தி லிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும். ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அனைத்தை யும் மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.

தர்பூசணி யில் உள்ள விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக எடுத்து வைக்கவும். மிக்சியில் தர்பூசணி, ஆரஞ்சு சாறு, உப்பு, தேன், ஆப்பிள், ஐஸ் கட்டிகள் போட்டு நன்றாக அடிக்கவும்.

அரைத்த ஜூஸை கண்ணாடி கோப்பையில் ஊற்றி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டு களையும் புதினா இலை களையும் போட்டு பருகவும். சத்தான தர்பூசணி ஆரஞ்சு ஜூஸ் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)