சுவையான தவா பரோட்டா செய்வது எப்படி?





சுவையான தவா பரோட்டா செய்வது எப்படி?

0
தமிழ் நாட்டில் பரோட்டா பிடிக்காத மனிதர்கள் யாரேனும் உண்டா என்றால் இல்லை என்பதே என்னுடைய அனுமானம். பரோட்டாவிற்கு பூர்வீகம் எது என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை அல்லது எனக்கு தெரியவில்லை. 
சுவையான தவா பரோட்டா செய்வது எப்படி?
தமிழ் நாடு அல்லது கேரளாவாக இருக்க கூடும். இந்தப் பரோட்டா தயாரிக்கப் பயன்படுவது வெள்ளை கோதுமை என்றழைக்கப்படும் மைதா. கோதுமை மிகப் பழமையான தாவரப் புரதம். 

கோதுமையில் புரதம் மாவு வடிவில் இருப்பதால், 99 சதவீதம் எளிதில் ஜீரணமாகி விடும். ஆனால், மைதா அப்படிப்பட்டதல்ல. 

இந்த மைதாவில் சர்க்கரைச் சத்தைக் கொண்ட 100 சதவீத ஸ்டார்ச் எனப்படும் கார்போ ஹைட்ரேட் மட்டுமே உள்ளது. நார்ச்சத்து, வைட்டமின், புரதம் போன்ற எதுவுமே இருக்காது. 

நாம் பரோட்டாவை அதிகளவு சாப்பிட்டால்., பரோட்டா செரிமானம் அடைவதற்கு அதிகளவு நேரத்தை எடுத்து கொள்கிறது. 
பரோட்டாவின் இருக்கும் எண்ணெயால் கொலஸ்ட்ரால் அதிகரித்து., உடலுக்கு சோர்வை அதிகரிக்கும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது மனதில் இருக்க வேண்டும்.

சரி இனி மைதா மாவு பயன்படுத்தி சுவையான தவா பரோட்டா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை :

மைதா மாவு 500 கிராம்

உப்பு தேவையான அளவு

நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்

செய்முறை :
சுவையான  தவா பரோட்டா செய்வது எப்படி?
மைதா மாவுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து, சற்று இளக்க மாகப் பிசைந்து, நல்லெண்ணெய் ஊற்றி மறுபடியும் பிசைந்து, பாத்திரத்தில் போட்டு, 2 மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.
அதன்பின் பூரிப்பலகை மீது சிறிதளவு நல்லெண்ணெய் தடவிக் கொள்ளவும். சிறிதளவு மாவை எடுத்து, உருண்டை யாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, விரல்களால் தட்டி பலகை அளவு இழுத்து, விரிக்கவும். 

விரித்த மாவை மடிப்புகளாக செய்து, நீளமாக ஆனதும், அப்படியே வட்டமாக சுற்றி, அரை அங்குல பருமனாகத் தட்டிக் கொள்ளவும். தோசை கல்லில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பரோட்டாவைப் போடவும். 

சுற்றிலும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும், பரோட்டா, பொன் நிறமாக சிவந்து, வெந்ததும் எடுத்து, பரிமாறவும். இது போல் எல்லா மாவிலும் பரோட்டா தயாரிக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)