முளைகட்டிய பயறு பிரியாணி செய்வது எப்படி?





முளைகட்டிய பயறு பிரியாணி செய்வது எப்படி?

0
குறைவான கலோரி, அதிக ஃபைபர் சத்து, வலுவான புரோட்டின் சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஸ்னாக்ஸாக முளைகட்டிய பயறுகள் குறிப்பிடப் படுகின்றன.
முளைகட்டிய பயறு பிரியாணி செய்வது எப்படி?
ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதன் காரணமாக முளைகட்டிய பயறு வகைகள் சூப்பர் ஃபுட்ஸ் என்று குறிப்பிடப்படுகிறன. 

முளைகட்டிய பயறு வகைகளை பலர் பச்சையாகவும் உட்கொள்கிறார்கள் சிலர் லேசாக வேகவைத்து அல்லது சமைத்தும் உட்கொள்கிறார்கள். 

பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அப்படியே ரா-வாக முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் சில நன்மைகளும் கூடவே சில அபாயங்களையும் கொண்டு உள்ளது. 

பச்சையாக உட்கொள்ளப்படும் முளைகட்டிய பயறு வகைகள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவ கூடும். 
பச்சையாக எடுத்து கொள்ளப்படும் ஸ்ப்ரவுட்ஸ்களில் குறைவான ஆன்டி - நியூட்ரியன்ட்ஸ் உள்ளன. இது செரிமான செயல்முறையின் போது தாதுக்களை உறிஞ்சுவதை உடல் திறம்பட செய்ய உதவுகிறது.

தினசரி உணவில் சமைக்காத முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்வது நம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அளிக்கும். 

இப்பழக்கம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படும் HDL-ஐ அதிகரிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது என்பதை பல ஆய்வுகள் எடுத்து காட்டியுள்ளன. 
தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப்,

முளை கட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,

மெல்லிய தாக நறுக்கிய முட்டைகோஸ், குடமிளகாய், ஸ்பிரிங் ஆனியன் (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,

சோயா சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்,

கொத்த மல்லித்தழை - 3 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு சிறிதளவு உப்பு, மூன்றரை கப் நீர் சேர்த்து உதிர் உதிராக வேக வைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகள் போட்டு வதக்கி, முளை கட்டிய பயறு சேர்த்து மேலும் வதக்கி (முளை உடைந்து விடாமல்), இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, சோயா சாஸ் சேர்த்து இறக்கி விடவும். 
சாதத்தை அதில் சேர்த்துக் கிளறி மல்லித் தழை தூவி அலங்கரிக் கவும். 

குறிப்பு: 

புரோட்டீன் சத்து நிறைந்த இந்த பிரியாணியை மிகவும் விரைவில் தயார் செய்து விடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)