ரோகன் ஜோஸ் ரெசிபி | Rogan Josh Recipe !





ரோகன் ஜோஸ் ரெசிபி | Rogan Josh Recipe !

0
மட்டன் குழம்பை விரும்பாத வர்கள் உண்டா என்ன…! காஷ்மீரிகளின் உணவுகளில் ஒன்று ரோகன் ஜோஸ். 
ரோகன் ஜோஸ் ரெசிபி

வாசனையான மாசாலக்கள் கலந்து தயிர் சேர்த்து குக்கரில் கறி மிருதுவாக வேக வைக்க வேண்டும். டின்னர் பார்ட்டிக்கு சுவையான உணவை எளிதாக தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

1 கிலோ கிராம் இறைச்சி

1 கப் கடுகு/ ரிஃபைண்ட் ஆயில்

3 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்

3 தேக்கரண்டி பெருஞ்சீரகத் தூள்

2 தேக்கரண்டி இஞ்சி பவுடர்

2 தேக்கரண்டி சீரகத்தூள்

3 தேக்கரண்டி கறுப்பு ஏலக்காய்

1 தேக்கரண்டி பெருங்காயம்

4 துண்டுகள் பச்சை ஏலக்காய்

2 பட்டை

2 பிரிஞ்சி இலை

2 கிராம்பு

1/3 தேக்கரண்டி குங்குமப் பூ (விருப்பம்)

1 கப் தயிர்

ஒரு சிட்டிகை உப்பு

எப்படி செய்வது 
ராயகோளா பிரியாணி செய்வது எப்படி?
இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் !
கறியை நன்றாக கழுவி, குக்கரில் எண்ணெய்யை ஊற்றி சூடேற்றவும். பட்டை, பிரிஞ்சி இலை, பச்சை ஏலக்காய், கிராம்பு, ஒரு டே.ஸ்பூன் உப்பு, பெருங்காயம், மற்றும் கறியை போடவும். கறி நன்றாக வதங்கியதும் ஒரு கப் தண்ணீரை சேர்க்கவும்.

பின் சிவப்பு மிளகாய்த் தூள் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை கறியில் சேர்க்கவும். ஒரு நிமிடம் நன்றாக கிளறவும்.
போக்குவரத்து விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் 6.5 லட்சம் !
மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா ?
அடுத்து தயிரை ஊற்றி நன்றாக கிளறவும். மசாலா மற்றும் தயிர் என அனைத்தும் ஒன்றாக சேர நன்றாக கிளறவேண்டும்.

பின் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து பெருஞ்சீரக பொடி, இஞ்சி பொடி, சேர்த்து 2 நிமிடம் குக்கரை மூடிவைத்து வேக வைக்கவும். கறி மிருதுவாக வெந்தபின் கருப்பு மற்றும் பச்சை ஏலக்காயை போடவும்.

இறுதியாக இறக்கு வதற்கு முன் சீரகத் தூளைத் தூவி சில நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)