ஸ்பிரிங் ஆனியன் சிம்பிள் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?





ஸ்பிரிங் ஆனியன் சிம்பிள் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?

0
சிறுநீர் அடக்கி வைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். 
ஸ்பிரிங் ஆனியன் சிம்பிள் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, வெளியே தள்ளி விடும். 

முருங்கைக்காயை விட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம். வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது.
உடல் சூட்டைக் குறைக்க வல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். 

உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். 

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்து விடும். 

சரி இனி வெங்காயம் கொண்டு சுவையான ஸ்பிரிங் ஆனியன் சிம்பிள் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 1 கப்,

பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - 1 கப்,

ஏலக்காய் - 3,

பச்சை மிளகாய் - 5,

உப்பு - தேவைக்கு,

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,

எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஸ்பிரிங் ஆனியன் சிம்பிள் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து கழுவி வடித்து வைத்துக் கொள்ளவும். பிரஷர் பேனில் வெண்ணெய், எண்ணெய் விட்டு ஏலக்காய் போட்டு பொரிந்ததும், 

கீறிய பச்சை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி, பாஸ்மதி அரிசி சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு தண்ணீர் 1½ கப், உப்பு சேர்த்து பிரஷர் பேனை மூடி வெயிட் போட்டு 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும். 

விசில் அடங்கியதும் ஃப்ரைடு ரைஸை எடுத்து காரசார கிரேவியுடன் சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)