உருளைக்கிழங்கு பச்சடி செய்வது எப்படி? | Potato Pachadi Recipe !





உருளைக்கிழங்கு பச்சடி செய்வது எப்படி? | Potato Pachadi Recipe !

0
தேவையானவை:

பாசிப்பருப்பு – அரை கப்,

உருளை கிழங்கு – 2,

பெரிய வெங்காயம் – 1,

தக்காளி – 4,

பச்சை மிளகாய் – 5,

புளி – சிறு நெல்லிக்காய் அளவு,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

மல்லித்தழை – சிறிது,

உப்பு – தேவைக்கு,

பூண்டு (விருப்பப் பட்டால்) – 3 பல் அல்லது

பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். 

செய்முறை: 
உருளைக்கிழங்கு பச்சடி செய்வது எப்படி?

பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வையுங்கள். உருளை கிழங்கு, வெங்காயம் இரண்டையும் தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள். 
தக்காளியை யும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள்.

எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேருங்கள். ஐந்து நிமிடம் வதங்கிய பின், உருளை கிழங்கு, சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள்.

கிழங்கு அரைப் பதமாக வெந்ததும் தக்காளி சேர்த்து, அது கரையும் வரை நன்கு வதக்குங்கள். பிறகு, புளியை அரை கப் தன்ணீரில் கரைத்து ஊற்றி, குறைந்த தீயில் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.
பச்சை வாசனை போனதும் பருப்பை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். 

(பெருங்காயத் துக்கு பதில் பூண்டை சேர்ப்பதா னால், பூண்டை நசுக்கி, வெங்காயம் வதக்கும் போது சேர்த்து வதக்க வேண்டும்). சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சுவையான சைட்-டிஷ் இது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)