உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?





உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?

0
அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு என்பது கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். 
உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?
அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாக உருளைகிழங்கு கருதப்படுகிறது. 
எனவே தான் கடினமான உணவுகளை செரிமானம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

அதே நேரம் ஒரே நாளில் அதிக அளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். இன்று உருளைக்கிழங்கை வைத்து அருமையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்,

உருளைக்கிழங்கு – 2,

வெங்காயம் 2,

தக்காளி – 2,

பச்சை மிளகாய் – 2,

கொத்தமல்லி, புதினா – 1/4 கப்,

சீரகம் – 1/2 டீஸ்பூன்,

பட்டை – 2, கிராம்பு – 3,

ஏலக்காய் – 3,

அன்னாசி பூ – 1,

பிரியாணி இலை – 1,

கரம் மசாலா – 1 டீஸ்பூன்,

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,

எண்ணெய், நெய் – 1/4 கப்,

உப்பு – தேவைக்கு.
செய்முறை :
உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?
தக்காளி, வெங்காயம், கொத்த மல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.  

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து தேவையான அளவு தண்ணீர், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போட்டு கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைத்து இறக்கவும்.
இப்பொழுது கமகமக்கும் சுவையான உருளைக்கிழங்கு பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி, குருமா மற்றும் உருளைக்கிழங்கு சில்லி சேர்த்து பரிமாறவும். 

குறிப்பு: 

பிரியாணி செய்யும் பொழுது வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கினால் சுவை அதிகரிக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)