ஓட்ஸ் - கோதுமை ரவை கார பணியாரம் செய்வது | Oats - Wheat Rava Kara Paniyaram !





ஓட்ஸ் - கோதுமை ரவை கார பணியாரம் செய்வது | Oats - Wheat Rava Kara Paniyaram !

0
தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்

பச்சரிசி மாவு - 1 டம்ளர்

கோதுமை ரவை - 1/4 கப்

தயிர் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 4 பல்

கறிவேப்பிலை - 1/2 இணுக்கு

பெருங்காயம் - சிறிதளவு

வெங்காயம் - 2.

செய்முறை :
ஓட்ஸ் - கோதுமை ரவை கார பணியாரம் செய்வது

இஞ்சி, பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஓட்ஸையும், கோதுமை ரவையையும் தனித்தனி யாக போட்டு வறுத்து ஒன்றாகத் திரிக்கவும்.
அரைத்த ஓட்ஸ் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் அரிசிமாவு, தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் வதக்கின பொருட்களை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும். 
வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான ஓட்ஸ் - கோதுமை ரவை கார பணியாரம் தயார். மிளகாய்ப்பொடி, தக்காளி சட்னி, சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)