நேந்திரம் பழம் அல்வா செய்வது எப்படி?





நேந்திரம் பழம் அல்வா செய்வது எப்படி?

0
நேந்திரம் என்பது வாழையின் ஒருவகை. இதிலிருந்து பெறப்படும் நேந்திரம் பழம் அல்லது ஏத்தம் பழம் மற்ற வாழைப்பழங்களை விட பெரியது. 
நேந்திரம் பழம் அல்வா
கேரளத்திலும், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. நேந்திரம் வாழைமரமானது 15 அடி முதல் 20 அடிவரை உயரம் வளரக்கூடியது. 

நேந்திரம் பழம் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்கின்றது. 

இரும்புச் சத்து குறைபாட்டு நோயான இரத்த சோகைப் பிரச்சினை உள்ளவர்கள் நேந்திரம் பழத்தினை தொடர்ந்து எடுத்து வரவேண்டும். நேந்திரம் வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவாகும். 

நரம்புத்தளர்ச்சி குணமாகும். குழந்தைகள் எடை குறைவாக இருந்தால் அவர்களுக்கு நேந்திரம் பழத்தை கொடுத்து வந்தால் நல்ல தூக்கத்தையும், புது ரத்த உற்பத்தியும், குழந்தைகள் பெறுவார்கள். 
நேந்திரம் பழத்தில் உடல் சூட்டினைக் குறைத்து குளிர்ச்சியை அதிகப்படுத்தும் சத்துக்கள் இருக்கின்றன. காச நோய் உள்ளவர்கள் தினமும் இரவு முட்டையுடன் இந்த நேந்திரம் பழத்தை சாப்பிட்டு வர காச நோய் நீங்கும்.

நேந்திரம் பழத்தை தினசரி உண்டு வருவதனால் சருமத்தைப் பாதுகாப்பதுடன், சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளும்.

தேவையானவை

நேந்திரம் பழம் - 4

வெல்லம் - அரை கிலோ

நெய் - 3 ஸ்பூன்

ஏலப்பொடி - 1 டீஸ்பூன்

முந்திரி - 2 ஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 1 ஸ்பூன்

செய்முறை

நேந்திரப் பழத்தை ஆவியில் வேக வைக்கவும். தோல் உரித்து, பழத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். வெல்லத்தை 1 கப் தண்ணீரில் கரைத்து, லேசாக கொதிக்க விடவும்.
கொதிக்க விட்டதை வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் ஏற்றி கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும். நேந்திரப்பழ விழுதை இதனுடன் கலந்து நன்கு கிளறவும். 

அல்வா பதம் வந்ததும், ஏலத்தூள், தேங்காய் துருவலும் நெய்யில் முந்திரியை வறுத்து இதில் சேர்க்கவும். சுவையான கேரளா ஸ்பெஷல் நேந்திரப்பழ அல்வா ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)