அசத்தலான கோவைக்காய் சப்ஜி செய்வது எப்படி?





அசத்தலான கோவைக்காய் சப்ஜி செய்வது எப்படி?

0
வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல்  பிரச்சனை தீரும்.  
அசத்தலான கோவைக்காய் சப்ஜி செய்வது எப்படி?
கோவக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. 

நீரிழிவு இருப்பவர்கள் அதிகம் சேர்க்க வேண்டிய காய்கறி வகைகளில் கோவக்காய் ஒன்று. 
கோவக்காய் ரத்த சர்க்கரை அளவை குறைக்க கூடியது.  கோவக்காயில் ரத்த சர்க்கரை அளவை குறைக்க கூடிய ரசாயனங்கள் உள்ளது. 

இது கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் வீக்கம், காயமடைந்த சருமத்திசுக்கள் மீண்டும் உருவாக என பல நன்மைகளை தருகிறது. 

சரி இனி கோவைக்காய் கொண்டு அசத்தலான கோவைக்காய் சப்ஜி செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம். 
தேவையான பொருட்கள் :

கோவக்காய் - 1 கப்

தக்காளி - 3

தனியா தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை - சிறிதளவு

சீரகம் - சிறிதளவு

மிளகாய்த் தூள் - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

கரம் மசாலா தூள் - சிறிதளவு

எண்ணெய் - 4 டீஸ்பூன்

முந்திரி பருப்பு - 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்)

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தேங்காய் - 1 பத்தை
செய்முறை :
அசத்தலான கோவைக்காய் சப்ஜி செய்வது எப்படி?
கோவக்காயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சிறிதளவு உப்பு போட்டு கோவக்காயை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். 
வடிகட்டிய அதே சுடு தண்ணீரில் தக்காளியை போட்டு வேக வைத்து தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய், ஊற வைத்த முந்திரி பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வேக வைத்த கோவக்காயை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் சிறிதளவு சீரகம் போட்டு பொரிந்ததும் அரைத்த தக்காளி சாறு, மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி பச்சை வாசனை போகுமாறு 3 நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும்.
அடுத்து அதில் வறுத்த கோவக்காயை தக்காளியில் போட்டு தனியா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விடவும். 

அடுத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, கரம் மசாலா தூள் போட்டு சப்ஜி திக்கான பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சூப்பரான கோவக்காய் சப்ஜி ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)