ஹைதராபாத் கத்தரிக்காய் கறி செய்வது | Hyderabad Eggplant Curry Recipe !





ஹைதராபாத் கத்தரிக்காய் கறி செய்வது | Hyderabad Eggplant Curry Recipe !

0
தேவையான பொருட்கள்

விதையில்லாத சிறிய கத்திரிக்காய் – 10 (நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்)

பழுத்த தக்காளி, பச்சை மிளகாய் – தலா 3

கிராம்பு, ஏலக்காய் – தலா 2

பட்டை – 1 துண்டு

சோம்பு – ஒரு தேக்கரண்டி

கசகசா – ஒன்றரை தேக்கரண்டி

முந்திரிப் பருப்பு – 10

வேர்க்கடலை, எள் – தலா ஒரு தேக்கரண்டி

கொப்பரைத் துருவல் – 3 தேக்கரண்டி

கெட்டியான பால் – ஒன்றரை கப்

பெரிய வெங்காயம் – 2

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
ஹைதராபாத் கத்தரிக்காய் கறி

கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக் காயை போட்டு வதக்கி தனியாக வைக்கவும். தக்காளியை அரைத்து வடிகட்டி வைக்கவும். 

கடாயில் ஒரு தேக்கரண் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நன்றாக வதக்கி, கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும்.

கிராம்பு முதல் கொப்பரைத் துருவல் வரையுள்ள பொருட்களை வறுத்து, சிறிதளவு தக்காளிப்பழச் சாறு சேர்த்து வெண்ணெய் போல் அரைக்கவும். 
தக்காளி சாறு முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். கத்திரிக்காய் கலவையில் பாலைச் சேர்த்து வேக விடவும். 

உப்பு சேர்த்து, கரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா கலவையை ஊற்றி நன்றாகக் கொதித்து, குழம்பு பதம் வந்ததும் இறக்கவும். சுவையான ஐதராபாத் கத்தரிக்காய் கறி தயார்!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)