வொயிட் சாஸ் செய்வது எப்படி? | How to make white sauce?





வொயிட் சாஸ் செய்வது எப்படி? | How to make white sauce?

0
தேவையானவை:

* வெண்ணெய் - 50 கிராம்

* மைதா - ஒரு கப்

* பால் - 2 கப்

* மிளகுத்தூள் - (சுமார் 2 டீஸ்பூன்)

* உப்பு - தேவையான அளவு

* சீஸ் - அரை கப்
செய்முறை:
வொயிட் சாஸ் செய்வது

ஒரு கனமான வாணலியில் தீயை மிதமாக்கி வெண்ணெயைச் சேர்க்கவும். முழுதாக அது உருகுவதற்கு முன்பே, மைதாவைச் சிறிது சிறிதாகத் தூவி வறுக்கவும். 
இதில், பாலைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கெட்டிப் படாமல் கிளறவும். கலவைத் தளர இருக்க வேண்டும். கெட்டியாகி விட்டால் சிறிது நீரைச் சேர்த்து தளர்வாக்கவும். 

இத்துடன் உப்பு, மிளகுத் தூள், துருவிய சீஸையும் சேர்த்து கிளறி இறக்கினால் வொயிட் சாஸ் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)