கேரட் சேர்த்து தக்காளி சாஸ் செய்வது எப்படி?





கேரட் சேர்த்து தக்காளி சாஸ் செய்வது எப்படி?

0
பிரைடு ரைஸ், நூடுல்ஸ் செய்யும் போது தக்காளி சாஸ் தேவைப்படும். இந்த தக்காளி சாஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கேரட் சேர்த்து தக்காளி சாஸ்
தேவையானவை:
* தக்காளி - ஒரு கிலோ

* ஜாதிப்பூ, ஜாதிக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

* ஆரிகானோ இலை - ஒரு டீஸ்பூன்

* வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

* கேரட் - ஒன்று (துருவவும்)

* நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* வெண்ணெய் - தேவையான அளவு

* சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

* தக்காளி சாஸ், ஃப்ரெஷ் க்ரீம் - தலா ஒரு கப்
இடுப்புச் சதையை குறைக்கும் உடற்பயிற்சிகள் !
செய்முறை:
தக்காளியைக் கழுவி வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வெண்ணெய் விட்டு உருக்கி, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். 
எலியை ஒழிக்க தமிழன் செய்த வெலை - காணொளி !
இத்துடன் துருவிய கேரட்டையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சாஸ், ஜாதிக்காய் பொடி, ஜாதிப்பூ, மசித்த தக்காளி, உப்பு, சர்க்கரை, ஆரிகானோ இலை, ஃப்ரெஷ் க்ரீம் 

முதலியவற்றைச் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கி, குளிர்ந்த பிறகு ஒரு பாட்டிலில் அடைத்து வைக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)