சில்லி சாஸ் செய்வது எப்படி? | How to Make Chili Sauce !





சில்லி சாஸ் செய்வது எப்படி? | How to Make Chili Sauce !

0
சைனீஸ் dishes செய்யும் போது சாஸ் ஊற்றினால் தான் நன்றாக இருக்கும். ஆனால் கடையில் வாங்கும் சாஸ் இல் நிறைய சக்கரை இருக்கும். ஆகையால் வீட்டில் செய்வதே சிறந்தது.
சில்லி சாஸ் செய்வது

ஏற்கெனவே க்ரீன் சில்லி சாஸ் ரெசிபி போஸ்ட் செய்துள்ளேன். இன்று ரெட் சில்லி சாஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம். 
இந்த ரெசிபியில் வினிகர் கட்டாயம் தேவை. அது தான் chinese dish ற்கு வாசனை கொடுக்கும். உங்களிடம் எந்த வினிகர் இருந்தாலும் அதை சேருங்கள். நான் ரெட் wine வினிகர் சேர்த்திருக் கிறேன்.

தேவையான பொருட்கள்:

உலர்ந்த சிவப்பு மிளகாய் - 100 கிராம்

நெய் - 2 tbs

சீரகம் - 2 தேக்கரண்டி

இஞ்சி - 2 "துண்டு

பூண்டு - ஒன்று

உப்பு - ருசிக்க

சிவப்பு ஒயின் வினிகர் - 3/4 கப்

செயல்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் சீரகம் சேர்க்கவும். இஞ்சி, பூண்டு மற்றும் சிவப்பு மிளகாய் ஆகிய வற்றையும் சேர்க்கவும். சிறிது நேரம் சிறு தீயில் வதக்கவும் .
உப்பு, மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் நன்றாக வற்றி வரும் பொது தீயை off செய்து கலவையை ஆற விடவும். மிக்ஸி ஜாரில் கலவையை போட்டு முதலில் 1/4 கப் வினிகர் ஊற்றி அரைக்கவும்.

மீதமுள்ள வினீகரையும் சேர்த்து நன்றாக அரைத்து, ஒரு ஜாடியில் சாஸ் ஐ மாற்றி பிரிட்ஜ் ல் வைத்து பயன்படுத்தவும். இது மூன்று மாதம் வரை நன்றாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)