அருமையான கேரட் - சென்னா பிரியாணி செய்வது எப்படி?





அருமையான கேரட் - சென்னா பிரியாணி செய்வது எப்படி?

0
கொண்டைக் கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக் கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 
கேரட் - சென்னா பிரியாணி
இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. 

மேலும் இதில் கரையும்  நார்ச்சத்துக்கள், அதிகப் படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க இவை உதவி  செய்கிறது. 

கருப்பு கொண்டைக் கடலையில் நிறைய அளவு புரோட்டீன் காணப்படுகிறது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கொண்டைக் கடலையை வைத்து உங்க உடல் எடையை குறைக்க முடியும். 

கூந்தல் ஆரோக்கியத்திற்கும், அடர்த்தியான கூந்தலுக்கும் உதவுகிறது. கொண்டைக்கடலை நாள்பட்ட நோய்களை விரட்டவும் உதவுகிறது. 
இரத்தத்தில் உள்ள ஹூமோ குளோபின் அளவை உயர்த்த முடியும். ஏனெனில் கொண்டைக் கடலையில் இரும்புச் சத்து அதிகளவு காணப்படுகிறது. சருமம் வயதாகுவதை தடுக்கிறது.

தேவையானவை:
பச்சரிசி - 2 கப்,

கறுப்பு கொண்டைக் கடலை - அரை கப் (ஊற வைக்கவும்),

கேரட் - 2,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,

பெரிய வெங்காயம் - ஒன்று,

மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),

பச்சை மிளகாய் - 2,

மீல்மேக்கர் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 8,

தேங்காய்ப் பால் (முதல், இரண்டாம், மூன்றாம் பால் எல்லாம் சேர்த்து) - ஒரு கப்,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
கேரட், வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். மீல் மேக்கரை 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, நீரைப் பிழிந்து வடிய விடவும். 

பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மீல் மேக்கர், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 
இதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, அரிசி சேர்த்து, இரண்டரை கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப் பால் விட்டு குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி... கொத்த மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)