புரதம் நிறைந்த கிரீன் தோசை செய்வது | Green Dose Recipe !





புரதம் நிறைந்த கிரீன் தோசை செய்வது | Green Dose Recipe !

0
தேவையான பொருட்கள் :

பச்சைப்பயறு - 1 கப்

சின்ன வெங்காயம் - 5

காய்ந்த மிளகாய் - 2

பூண்டு - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

முந்திரி - 3

உப்பு - சிறிதளவு

செய்முறை :
புரதம் நிறைந்த கிரீன் தோசை செய்வது

பச்சைப் பயறை இரவே நன்றாக கழுவி தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும். 

காலையில் ஊற வைத்த பச்சைப் பயறை மிக்ஸியில் போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், முந்திரி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
தோசை மாவு பதத்துக்கு மாவை கரைத்துக் கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசை களாக ஊற்றி இரு புறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சத்தான கிரீன் தோசை ரெடி. தக்காளி சட்னி, வெங்காய சட்னிக்கு தொட்டு சாப்பிட பொருத்த மாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)