கார்ன் புலாவ் ரெசிபி | Corn Pulao Recipe !





கார்ன் புலாவ் ரெசிபி | Corn Pulao Recipe !

0
பாஸ்மதி, சோளம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த எளிமையான ரெசிபி மதிய உணவிற்கு ஏற்றது.
கார்ன் புலாவ் ரெசிபி

தேவையான பொருட்கள்

250 கிராம் பாஸ்மதி அரிசி

80 கிராம் மக்காச் சோளம்

2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

1 வெங்காயம்

1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

1 தேக்கரண்டி உப்பு

4 பச்சை மிளகாய்

5 கிராம் சீரகம்

1 பிரியாணி இலை

1/2 தேக்கரண்டி மிளகு

8 கிராம்பு

2 கப் வெந்நீர்

3 மேஜைக்கரண்டி கொத்தமல்லி, நறுக்கப்பட்ட

2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

குடைமிளகாய், நறுக்கப்பட்ட

தேங்காய், துருவிய
குண்டர் சட்ட கைதியை காதலித்து மணந்து கொண்ட பெண் போலீஸ் !
எப்படி செய்வது

பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகிய வற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
கேரட் பால் அல்வா ரெசிபி !
அடுப்பில் கடாய் வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், சீரகம், கிராம்பு, பிரியாணி இலை, மிளகு, வெட்டி வைத்த வெங்காயம்,

பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் அத்துடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதில் மக்காச் சோளத்தை சேர்க்கவும்.

தண்ணீரை வடித்து பாஸ்மதி அரிசியை அதில் சேர்த்து நன்கு கிளறவும். அதில் 2 கப் வெந்நீர் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
நம் வீட்டில் ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

அரிசி முக்கால் பதத்திற்கு வெந்தபின் அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சிவப்பு, மஞ்சள் நிற குடைமிளகாய் சிறு துண்டுகளாக வெட்டி வதக்கி கொள்ளவும்.

அத்துடன் துருவிய தேங்காய், பொடியாக நறுக்கி வைத்த கொத்த மல்லியை சேர்த்து வதக்கி புலாவில் தூவி அலங்கரிக் கவும். இந்த புலாவை வெள்ளரிக்காய் ரெய்தாவுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)