குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி? | Capsicum Rice Recipe !





குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி? | Capsicum Rice Recipe !

0
என்னென்ன தேவை?

உதிரி உதிரியாக வடித்த சாதம் - 2 கப்,

பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

வறுத்து பொடிக்க...

கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 5,

தனியா - 1 டேபிள் ஸ்பூன்,

பெருங்காயம் - சிறிது.

தாளிக்க...

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை.

எப்படிச் செய்வது?
குடைமிளகாய் சாதம்
வறுக்க கொடுத்த வற்றை நன்கு வறுத்து பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து 
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து குடை மிளகாயை சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து சாதம், பொடித்த பொடியை கலந்து சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)