பாங்க் பீடா ரெசிபி | Bhang Peda Recipe !





பாங்க் பீடா ரெசிபி | Bhang Peda Recipe !

0
ஹோலி கொண்டாட்டம் உலகமெங்கும் தொடங்கி விட்டது. ஹோலி பார்ட்டியில் தவறாது இடம் பெறும் உணவுகளில் ஒன்று பாங்க். இந்த பாங்க் பீடாவை குழந்தைகள் கைகளுக்கு எட்டாத வண்ணம் வைப்பது நல்லது. 

பாங்க் பவுடருடன் நட்ஸ், கோவா மற்றும் நெய் சேர்த்து செய்யப் படுவதாகும். இந்த ஹோலி பார்ட்டியில் கூடுதல் கொண்டாட்ட த்தை சேர்க்கக் கூடியது.

தேவையான பொருட்கள்

2 மேஜைக் கரண்டி பாங்க் பவுடர்

1 கப் கோவா

1/2 கப் சர்க்கரை

2 மேஜைக் கரண்டி பிஸ்தா

1/2 கப் நெய்

கடாயில் எண்ணெய்யைச் சூடடேற்றி அதில் கோவா மற்றும் சர்க்கரையை சேர்க்கவும். கோவாவுடன் சர்க்கரை நன்றாக கலக்கும் அளவிற்கு நன்றாக பிசையவும்.

அதனுடன் பாங்க் பவுடர், பிஸ்தா ஆகியவற்றை சேர்ந்து கலந்து வைத்து கலவையை ஆறவைக்கவும்.

ஆறியபின் சின்ன காயின் வடிவத்தில் செய்து குளிர்சாதனப் பெட்டியில் 2-3 மணிநேரம் வைக்கவும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)