வாழைப்பூ சாம்பார் செய்வது | Banana Sambar Recipe !





வாழைப்பூ சாம்பார் செய்வது | Banana Sambar Recipe !

0
தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 8

துவரம் பருப்பு - 1 கப்

வாழைப்பூ - 1 கப்

உப்பு, தாளிக்க கடலை எண்ணெய் - தேவைக்கு

காய்ந்த மிளகாய் - 4

நறுக்கிய தக்காளி - 1

புளி - நெல்லிக்காய் அளவு

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

குழம்பு மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்

கடுகு, கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
வாழைப்பூ சாம்பார் செய்வது

வாழைப் பூவை சுத்தம் செய்து நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர், மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 3 விசில் விடவும்.
விசில் அடங்கியதும் திறந்து தக்காளி, புளிக்கரைசல், மிளகாய் பொடி, வாழைப்பூ, உப்பு போட்டு கலந்து மீண்டும் 1 விசில் விட்டு இறக்கவும்.

பின்பு பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்த பின்னர் 

சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி குக்கரி லிருந்து சாம்பாரை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும். சூப்பரான வாழைப்பூ சாம்பார் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)