பாதாம் குல்பி ரெசிபி | Badam Kulfi Recipe !





பாதாம் குல்பி ரெசிபி | Badam Kulfi Recipe !

0
கோடைக்காலம் என்றாலே ஐஸ்க்ரீமைத் தவிர மனம் வேறு எதையும் தேடுவ தில்லை. வீட்டிலே குல்பி ஐஸ்ஸினை செய்து சாப்பிட்டு மகிழலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் குல்பி செய்முறை
பாதாம் குல்பி ரெசிபி

தேவையான பொருட்கள்

200 gms பாதாம்

40 gms ரோஜா இதழ்கள்

1.5 லிட்டர் பால்

80 gms கோவா(இனிப்பில்லாதது)

70 gms சர்க்கரை

சில குங்குமப்பூ

எப்படி செய்வது 
தினமும் உடலுறவு உடலில் என்ன மாற்றம்  நடக்கும் தெரியுமா?
பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் உறிக்கவும் 90 சதவீதம் அளவை பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். ரோஜா இதழ்களை சுத்தம் செய்து ஊறவைத்து சர்க்கரை பாகுவில் போட்டு சமைக்கவும்.

சர்க்கரைபாகு திக்காகும் வரை சமைப்பது முக்கியம். குங்க்குமப்பூவை வெதுவெதுப்பான பாலில் கரைத்து வடிகட்டவும். பாலை கொதிக்க வைத்து சுண்ட வைக்கவும்,

அதனுடன் கோவா, பாதாம் பேஸ்ட், சர்க்கரை மற்றும் குங்குமப்பூ மற்றும் கோவா ஆகியவற்றைச் சேர்த்து கரையும் வரை சமைக்கவும்.

கலவை ஆறியதும் குல்பி அச்சில் ஊற்றில் நறுக்கிய பாதாம் துண்டுகள் மற்றும் ரோஜா இதழ்களைப் போட்டு ஃபிரீஸ் பண்ணவும். நன்றாக செட் ஆனதும் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)