புரதம் நிறைந்த பிரட்களை உட்கொள்ளுங்கள் !





புரதம் நிறைந்த பிரட்களை உட்கொள்ளுங்கள் !

0
பொதுவாகவே பிரட் என்பது சில செயல்முறைகளுக்கு பின் கிடைக்கப்படும் உணவு என்பதால் அதனை பெரிதும் விரும்பி சாப்பிடுபவர்கள் இல்லை. 
பிரட்களை உட்கொள்ளுங்கள்
தானியங்களை செயல் முறைகளுக்கு உட்படுத்தி தயாரிக்கப் படுவதால் இவற்றில் கலோரிகள் அதிகமாக இருக்கிறது.

இந்த அரோக்கிய மில்லாத உணவு உடல் எடையை குறைப்பதுடன் மேலும் சில உடல் உபாதைகளை உருவாக்க வல்லது. 

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பிரட் சாப்பிடுவதால் உடலில் இரத்த சர்க்கரை, உடல் பருமன் மற்றும் செரிமான கோளாறுகள் போன்றவை ஏற்படும் என தகவல் வெளியாகி யுள்ளது.
முழு தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் பிரட்டில் ஊட்டச் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. 

நீங்கள் லோ-கார்ப் டயட்டை பின்பற்றுபவராக இருந்தால் முழு தானியங்கள் சேர்க்கப்பட்ட பிரட்டை சாப்பிட வேண்டாம். 

ஆனால் இவற்றில் நார்ச்சத்து, புரதம் ஆகியவை அதிகமாக உள்ளது. முழு தானியங்கள் நிறைந்த சில பிரட் வகைகளை பார்ப்போம்.
ஓட்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந் திருக்கிறது. ஓட்ஸில் நுண்ணிய ஊட்டச் சத்துக்கள் இருப்பதால் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கிறது. 

ஓட்ஸ் பிரட் தயாரிக்கும் போது முழு கோதுமை மாவு கொண்டு தயாரிக்கலாம்.
ஃகுயினா பிரட்:
ஓட்ஸ் பிரட் தயாரிக்கும்
இந்த க்ளூட்டன் ஃப்ரீ மாவில் புரதம், கார்போ ஹைட்ரேட் மற்றும் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் நிறைந்தி ருக்கிறது. இதனை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

கம்பு பிரட்:

கம்பில் இரும்பு சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. 100 கிராம் கம்பில் 9 கிராம் புரதம் இருக்கிறது.

ஃப்ளாக்ஸ் பிரட்:

ஆளி விதையில் புரதம் அதிகமாக இருக்கிறது. ஊட்டச் சத்துக்கள் நிறைந்த ஆளி விதை கொண்டு பேக் செய்யப்படும் பிரட்டில் நார் சத்தும் நிறைந்துள்ளது.
இப்படி புரதம் அதிகமாகவும், கார்போ ஹைட்ரேட் குறைவாகவும் இருக்கும் பிரட் வகைகள் ஏராளமாக உள்ளது. மார்க்கெட்களில் கிடைக்கும் பிரட்களை விடுத்து, 

வீட்டிலேயே இது போன்ற ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருட்களை கொண்டு பிரட் தயாரித்து சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)