ஆண்மை பெருக ஆட்டிறைச்சி !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
ஆடு, கோழி, மீன், போன்ற மாமிச உணவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக் கின்றனர்.
ஆட்டிறைச்சி
ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. ஆட்டுக் கறியில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதமான பலனை தருவதாக உள்ளது.

ஒரு சிலருக்கு தலைக்கறி மிகவும் விருப்பமாக இருக்கும். தேங்காய் பாலில் சமைத்து சாப்பிடுவார்கள்.

இந்த தலைக் கறியை சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கின்றனர் மருத்துவர்கள். தலை தொடர்பான நோய் இருந்தால் அறவே அற்றுப் போகுமாம். குடலுக்கு பலம் கிடைக்கும்.

ஆட்டின் கண்

ஆட்டின் கண் சாப்பிட்டால் பார்வை கோளாறு உள்ளவர் களுக்கு பலம் கிடைக்கும். கண் கோளாறுகள் சரியாகும். ஆட்டின் நாக்கு உடல் சூட்டை அகற்றும். சருமத்திற்கு இளமை தரும் பளபளப்பை தரும்.
மழை நீர் தொட்டி அமைப்பது எப்படி?
ஆண்மை பெருகும் ஆட்டின் விதை மற்றும் கிட்னி இவைகள் வயாகராவை விடசக்திகள் அதிகம். சக்கரை நோயாளிகள் சக்கையாக உள்ள பகுதி சாப்பிடலாம் என்று டாக்டர்கள் கூறுவது;

கடினமான சக்கையான பகுதியை சாப்பிட்டால் அதிகமாக சாப்பிட மாட்டார்கள் என்பதால்! மீன் மண்டை மூலை கூட அதிகமாக விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும்.

ஆட்டின் மூளை

ஒரு சிலர் ஆட்டின் மூளையை தனியாக வறுத்து சாப்பிடுவார்கள். இதன் சுவையே அலாதியானது. இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும்.

கண்கள் குளிர்ச்சி பெறும். புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும். விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும்.
ஆட்டின் மூளை

கப நோய் பாதிப்புள்ள வர்கள் ஆட்டின் மார்பு பகுதியில் உள்ள கறியை சாப்பிட்டலாம். நெஞ்சு எலும்பு கறியை சமைத்து உண்பதால் மார்புக்கு பலம் கிடைக்கும்.
எப்படி பணத்தை கடத்துகிறார்கள்?
மார்பு பகுதியில் உள்ள புண்கள் ஆறும். ஆட்டு இதயம் சாப்பிட்டால் நமது இதயத்திற்கு பலம் கிடைக்கும். மன ஆற்றல் பெருகும்.

உடலுக்கு குளிர்ச்சி

ஆட்டின் நுரையீரல் சாப்பிட்டால் உடல் வெப்பம் தணியும், நுரையீரலுக்கு வலு கிடைக்கும். அதே போல் ஆட்டின் கொழுப்பு இதயத்திற்கு நல்ல பலத்தை தரும். வயிற்றில் உள்ள எந்த வித புண்களையும் ஆற்றும் சக்தி இதற்கு உண்டு.
உடலுக்கு குளிர்ச்சி

கால், மூட்டு நோவு உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து குடிக்கலாம். இதனால் கால்களுக்கு வலிவு கிடைக்கும்.
ஏன் செம்பு மோதிரம் சருமத்தில் பச்சை நிறத்தை உண்டாக்கு கிறது?
கிராம புறங்களில் நெஞ்சு எலும்பு வைத்து சூப் வைத்து கொடுப்பது வழக்கம் வளரும் குழந்தை களுக்கு எலும்புக்கு நல்லது என்று வைத்து கொடுப்பது வழக்கம்.

கொழுப்பு சத்தும் அதிகம் நாட்டு வைத்தியர்கள் கூட கட்டு கட்டும் போது கூட முட்டையை வைத்து தான் கட்டுபோடுவர்கள்.
ஆண்மை பெருக ஆட்டிறைச்சி ! ஆண்மை பெருக ஆட்டிறைச்சி ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 04, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚