உணவின் வாசனை பசியை தூண்டாது !





உணவின் வாசனை பசியை தூண்டாது !

0
உணவின் வாசனையை நுகர்ந்தாலே அந்த உணவை சுவைத்தது போன்ற நிறைவான உணர்வு தோன்றும் என்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வு. மார்கெட்டிங் ரிசர்ச் என்ற இதழ் இந்த ஆய்வை வெளி யிட்டுள்ளது. 
உணவின் வாசனை பசியை தூண்டாது

அதில் உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோர், உடல் எடையைக் கட்டுப்படுத்த நினைப்போர், தன்னை சுற்றிலும் உணவின் மணத்தை பரப்பினால் அந்த சூழல் அவருக்கு பசியைத் தூண்டாது என்கிறார் ஆய்வின் தலைவர் டிபயன் பிஸ்வாஸ்.

இதற்காக ஒரு குழுவை அறையில் வைத்துள்ளனர். அறை முழுவதும் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு என இரண்டு உணவு எடுத்துக் கொண்டு அதன் மணத்தை வீட்டில் பரப்பியுள்ளனர். 

உதாரணத்திற்கு 

ஆப்பிள் மற்றும் பீட்ஸா, குக்கீஸ் மற்றும் ஸ்ட்ராபெர்ரி என்ற வகையில் மணம் பரப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலில் 30 நொடிகளு க்கும் குறைவான நேரத்தில் குக்கீஸ் நறுமணம் பரப்பப் பட்டுள்ளது. 
அப்போது அவர்களுக்கு குக்கீஸ் சாப்பிடும் உணர்வு அதிகரித்துள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு அந்த உணர்வு இருந்த நிலையில் ஸ்ட்ராபெர்ரியை பார்த்ததும் குக்கீஸ் வேண்டாம் என தவிர்த்து ஸ்ட்ராபெர்ரியை எடுத்துள்ளனர். 

அதே போல் தான் பீட்ஸாவின் மணத்தை பரப்பி விட்டுள்ளனர். பின் அதை சாப்பிட விரும்பாமல் ஆப்பிளை விரும்பி சாப்பிட் டுள்ளனர். 

ஆக..ஒரு உணவின் மணத்தை நுகர்ந்தாலே அவர்களுக்கு அந்த உணவை சாப்பிட்ட உணர்வு தோன்றி சாப்பிட விரும்புவ தில்லை. அதை நன்கு சாப்பிட்ட உணர்வு தோன்றுகிறது என்று ஆய்வில் கூறியுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)