ருசியான ஸ்வீட் கார்ன் வெஜ் சூப் செய்வது எப்படி?





ருசியான ஸ்வீட் கார்ன் வெஜ் சூப் செய்வது எப்படி?

0
ஸ்வீட் கார்ன் நல்ல அளவு கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபோலேட் கொண்டுள்ளன. இது லுடின் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற கண் ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யக் கூடியவை. 
ருசியான ஸ்வீட் கார்ன் வெஜ் சூப் செய்வது எப்படி?
இது கண் மாகுலர் சிதைவை தடுக்கும். அதிக நார்ச்சத்து கொண்டுள்ளதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குடல் இயக்கம் சீராக வைக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது.

ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதால் நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும். இதனால் ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை நீங்கள் தவிர்க்கலாம். இதனால் எடை கட்டுப்படுத்த செய்யலாம். 

மேலும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம். இந்த சோளத்தில் இருந்து மாவுச்சத்து ( நாள் ஒன்றுக்கு 10 கிராம்) அளவு உட்கொள்வது குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு திறனை குறைக்கும். 
சோளத்தில் இருக்கும் சில பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பீனாலிக் அமிலங்கள் இதற்கு உதவுகின்றன. 

வழக்கமான முழு தானியம் அளவு செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீரிழிவு, உடல் பருமன் போன்ற நாட்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கும்.

என்னென்ன தேவை?

இனிப்பு சோள முத்துக்கள் – 1 கப்,

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் – தலா 1 டேபிள் ஸ்பூன்,

ஸ்ப்ரிங் ஆனியன் – 1 டீஸ்பூன்,

உப்பு, சோள மாவு,

வெள்ளை மிளகுத் தூள் – தேவைக்கு.

எப்படிச் செய்வது? 
ருசியான ஸ்வீட் கார்ன் வெஜ் சூப் செய்வது எப்படி?
சோளத்தை ஊற வைத்து முக்கால் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, கேரட், பீன்ஸ், அரைத்த சோளத்தை போட்டு கொதிக்க வைக்கவும்.
இத்துடன் சோள மாவை சிறிது நீரில் கரைத்து ஊற்றி, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து இறக்கவும். ஸ்ப்ரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)