சூப்பரான வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?





சூப்பரான வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?

0
நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளது. 
சூப்பரான வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி?
ஏழைகளின் பாதாம் நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளன. 

ஊற வைத்த வேர்க்கடலை சாப்பிட்டால், உடல் பருமன், பலவீனமான தசைகள் போன்ற பிரச்சனைகளை அது நீக்கும். ஊற வைத்த வேர்க்கடலை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

நிலக்கடலையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால், உடலில் இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். சுவையில் தனி ரகம் கொண்ட வேர்க்கடலை சட்னியில் வைட்டமின்களும் ஊட்டச் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. 
பிரபலமான உணவுகளாக இட்லி, தோசை உள்ளன. இவற்றுக்கு சுவையான சட்னி- சாம்பார் என்றால் அருமையாக இருக்கும். அந்த வகையில், இவற்றுக்கு ஏற்ற சட்னியாக வேர்க்கடலை சட்னி உள்ளது.

சுவையில் தனி ரகம் கொண்ட வேர்க்கடலை சட்னியில் வைட்டமின்களும் ஊட்டச் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. மேலும், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் அற்புத சட்னியாகவும் இது உள்ளது. 
இந்த டேஸ்டி சட்னியை தயார் செய்ய வெறும் 10 நிமிடங்கள் போதும். இப்போது வேர்க்கடலை சட்னி எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையானவை :

ஒருகப் வேர்க்கடலை, வெறும் வாணலியில் வறுத்துத் தோல் நீக்கிக கொள்ளவும். 

தனியா விதை ஒரு டீஸ்பூன்,

ஒரு சிறிய துண்டு இஞ்சி

வற்றல் மிளகாய் 3,

தேங்காய்த் துருவல் அரை கப்,

புளி, சின்ன எலுமிச்சை அளவு,

ருசிக்கு உப்பு

புதினா அல்லது கறிவேப்பிலை இலைகள் அரை கப்.

எண்ணெய் நான்கு டீஸ்பூன், 

தாளிக்க கடுகு, 

உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன்.

புளிக்கு பதில் வேண்டிய அளவு தக்காளி பழம் வதக்கி உபயோகிக்கலாம்.
செய்முறை :
வேர்க்கடலை சட்னி செய்வது
புளியை ஊற வைத்து கெட்டியாக சாறை எடுத்துக் கொள்ளவும். தனியா, மிளகாய், இஞ்சியை எண்ணெயில் வறுத்துக் கொண்டு புதினாவை யும் சேர்த்து இறக்கவும். வறுத்து தோல் நீக்கிய

வேர்க்கடலை யுடன் புளி நீர், தேங்காய், வறுத்த சாமான்கள், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத் தெடுத்து எண்ணெயில் தாளித்துக் கொட்டவும். அரை டீஸ்பூன் வெல்லமும் சேர்க்கலாம்.
வேண்டிய சுவைக்கேற்ப வெங்காயம், பூண்டு, என பிடித்த ருசிக்கேற்ற வாறு சாமான்களை மாற்றிப் போட்டு ஜமாய்க்கலாம். புளிப்பு காரமும், எப்படி வேண்டுமோ அப்படி மாற்றலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)