பாசிப்பருப்பு தோசை செய்வது | Pacipparuppu Dosa Recipe !





பாசிப்பருப்பு தோசை செய்வது | Pacipparuppu Dosa Recipe !

0
தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - 1 கப்,

பச்சரிசி - கால் கப்,

தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 3,

சின்ன வெங்காயம் - 10,

பெருங்காயம் - 1 சிட்டிகை.

செய்முறை:
பாசிப்பருப்பு தோசை செய்வது

அரிசி + பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காய த்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். நன்றாக ஊறிய அரிசி, பருப்புடன் மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைத்து கொள்ளவும். 

அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். 
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். 

இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி அருமையாக இருக்கும். சூப்பரான பாசிப்பருப்பு தோசை ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)