Flash News

கேரட் தக்காளி சூப் செய்வது | Carrot Tomato Soup Recipe !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
என்னென்ன தேவை?

கேரட் – 1,

பழுத்த பெங்களூர் தக்காளி – 3,

பெரிய வெங்காயம் – 1/2 அளவு,

கொத்த மல்லித் தழை – சிறிது,

தண்ணீர் – 400 மி.லி.,

உப்பு, மிளகுத் தூள் – தேவைக்கு,

கிராம்பு – 2,

பூண்டு – 2 பல்,

பட்டை – 1/2 இன்ச் அளவு.

எப்படிச் செய்வது?
கேரட் தக்காளி சூப் செய்வது

குக்கரில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கேரட், பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகுத் தூள், தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் விட்டு தக்காளியை வேக விடவும்.
சூடு ஆறியதும் நன்கு மசித்து வடித்துக் கொள்ளவும். குறைவான சூட்டில் 300 மி.லி. வரும் வரை சூப்பைச் சூடு செய்து, உப்பு சேர்த்து கலந்து, நறுக்கிய கொத்த மல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு:

சூப்பை கொதிக்க வைத்தால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகி விடும். ஆகவே பாத்திரத்தை மூடியோ அல்லது குக்கரில் வைத்தோ சூப் செய்யவும்.

No comments

Copyright © 2016 www.esamayal.com. All rights reserved
close