வாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட் செய்வது | Banana Stuffing - Cucumber Salad Recipe !





வாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட் செய்வது | Banana Stuffing - Cucumber Salad Recipe !

0
தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு - பெரிய துண்டு,

வெள்ளரிக்காய் - 1 சிறியது,

எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,

வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்,

கொத்தமல்லி - சிறிதளவு,

கடுகு - கால் டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

வாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட்

செய்முறை:
வாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட்

கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாழைத் தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடங்கள் வேக வைத்த கொள்ளவும். 

வெள்ளரிக் காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, வாழைத் தண்டு கலவையில் கொட்டி, மீண்டும் ஒருமுறை கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். சத்தான வாழைத்தண்டு - வெள்ளரிக்காய் சாலட் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)