அருமையான வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?





அருமையான வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?

0
வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.
அருமையான வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி?
சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்.
நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டி ஜூஸ் குடிப்பது நல்லது. சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்த வாழைத்தண்டு உதவியாக இருக்கும்.

மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

என்னென்ன தேவை?

வாழைத்தண்டு – மீடியம் அளவு

சின்ன வெங்காயம் – 3

தக்காளி – 1

சீரகம் – அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 1

மிளகு – அரை ஸ்பூன்

தனியா – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

எப்படிச் செய்வது?
வாழைத்தண்டு சூப் செய்வது
வாழைத் தண்டை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு, குச்சியால் நாரை நீக்கி தனியாக வைக்கவும். பின்னர் சீரகம், தனியா, மிளகு மூன்றையும் வறுத்து மிக்ஸியில் அரைத்து தூளாக்கவும். 

இப்போது காய்ந்த மிளகாய், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்த மல்லி, இஞ்சி பூண்டு விழுது என அனைத்தை யும் மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை நன்கு வதக்கவும். 
இத்துடன் வாழைத் தண்டை சேர்த்து 5 டம்ளர் நீர் விட்டு லேசாக கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து ஏற்கனவே அரைத்த சீரக கலவைத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். 

வழக்கம் போல வாசனைக்கு கறிவேப்பிலை, மல்லியை போட்டு இறக்கவும். அவ்வளவு தான்…வாழைத் தண்டு சூப் ரெடி… வீட்டில் அனைவரும் குடிக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)