கொத்து மல்லி பச்சடி செய்வது | Making Coriander Pachadi Recipe !





கொத்து மல்லி பச்சடி செய்வது | Making Coriander Pachadi Recipe !

0
தேவையானவை:

துவரம் பருப்பு – அரை கப்,

மல்லித்தழை – பெரிய கட்டாக 1,

பெரிய வெங்காயம் – 1,

தக்காளி – 1,

பச்சை மிளகாய் – 2,

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்,

புளி – சிறு நெல்லிக்காய் அளவு,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
கொத்து மல்லி பச்சடி செய்வது

துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேக வையுங்கள். மல்லித் தழையை சுத்தம் செய்து, வேர் நீக்கி இளங்காம்பாக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 

வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேருங்கள். 
வெங்காயம் நன்கு வதங்கியதும் முக்கால் பாகம் மல்லித் தழை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, புளிக் கரைசலை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூளையும் போட்டு, சிறு தீயில் பச்சை வாசனை போகக் கொதிக்க விடுங்கள். 

பச்சை வாசனை போனதும் துவரம் பருப்பையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். மல்லி மணத்துடன் கமகமக்கும் இந்தப் பச்சடி, எந்த உணவுக்கும் ஏற்ற சூப்பர் ஜோடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)