வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது எப்படி?





வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது எப்படி?

0
கோடைகாலம் வந்து விட்டாலே வெள்ளரிக்காய் சீசன் களைகட்ட ஆரம்பித்து விடும். அதிக நீர்ச்சத்து உள்ள இந்த காயை விரும்பாதவர்கள் என்று யாரும் கிடையாது. 
சுவையான வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது எப்படி?
இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். 

நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது. 

வெள்ளரியில் வைட்டமின்கள், உணவு வகை நார்ச்சத்து, நீர் ஆகியவை நிறைந்துள்ளது. ஆகவே, செரிமானத்திற்கு உதவுகிறது. 

தினமும் ஒரு வெள்ளரியை சாப்பிட்டால், மலம் கழிப்பதிலுள்ள பல பிரச்னைகளை அது தீர்க்கும். மலச்சிக்கலை போக்கக்கூடிய தன்மை வெள்ளரிக்கு உண்டு. 
நம் உடலின் செயல்பாட்டிற்கு நீர் முக்கியமானது, வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து இருப்பதால் உடல் வறட்சியை போக்கும். 

மேலும் உடல் ஏற்பட்டுள்ள வெப்பத்தை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடலாம். வெள்ளரிக்காய் உடல் சூட்டை தணிக்கும். 

சரி இனி வெள்ளரிக்காய் கொண்டு சுவையான வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

பழுத்த பெங்களூர் தக்காளி – 3, 

பெரிய வெங்காயம் – 1,

கொத்த மல்லித்தழை,

கறிவேப்பிலை – சிறிது,

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு,

வெள்ளரிக்காய் – 1/2 துண்டு,

கேரட் – 1
செய்முறை :
சுவையான வெள்ளரிக்காய் தக்காளி சாலட் செய்வது எப்படி?
தக்காளி, வெங்காயம், வெள்ளரிக் காய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக் காய், கேரட்டை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

கடைசியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்த மல்லியால் அலங்கரித்து பரிமாறவும். சத்தான வெள்ளரிக்காய் தக்காளி சாலட் ரெடி.
குறிப்பு: 

சாலட் செய்ய நாட்டுத் தக்காளி, ஹெப்பிரிட் தக்காளியைப் பயன் படுத்தாமல், பெங்களூர் தக்காளியை பயன் படுத்தினால் சாலட் புளிக்காது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)