சாமை கருப்பு உளுந்து கஞ்சி செய்வது | Sam Black Ullus Kanji Recipe !





சாமை கருப்பு உளுந்து கஞ்சி செய்வது | Sam Black Ullus Kanji Recipe !

0
தேவையான பொருள்கள் :

சாமை அரிசி – 1 கப்

கருப்பு உளுத்தம் பருப்பு – கால் கப்

வெந்தயம் – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

முழுப்பூண்டு – 2

தேங்காய் துருவல் – அரை கப்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :
சாமை கருப்பு உளுந்து கஞ்சி செய்வது

சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பூண்டை தோல் நீக்கி வைக்கவும். முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, நன்றாக கழுவி அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

உளுந்து பாதியளவு வெந்ததும் ஊற வைத்த சாமை அரிசியை சேர்க்கவும். அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும்.

அனைத்து நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சூப்பரான சாமை கருப்பு உளுந்து கஞ்சி ரெடி. கஞ்சி திக்காக இருந்தால் பால் அல்லது மோர் அல்லது சூடான நீர் சேர்த்து கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)