ரோஜா குல்கந்து செய்வது | Rose Gulkand Recipe !





ரோஜா குல்கந்து செய்வது | Rose Gulkand Recipe !

0
மலச்சிக்கல் தான் அனைத்து நோய்களு க்கும் ஆரம்பம். இந்த பிரச்னை நீங்கி விட்டாலே உடலில் பாதி பிரச்னை தீர்ந்து விடும். 
ரோஜா குல்கந்து செய்வது

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைக்கு திட்ட மிடுபவர்கள், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை களுக்கு கீழே சொல்லப் பட்டுள்ள தீர்வுகள் உடனடி தீர்வைக் கொடுக்கும். 
ஒரு வாரத்தில் பெரியளவு மாற்றத்தை உணர முடியும். இங்கு சொல்லப்படும் எல்லாத் தீர்வுகளும் இனிப்பான விஷயம் என்பதால் குழந்தைகள் அடம் பிடிக்காமல், விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடு வார்கள். 

மலச்சிக்கல் முற்றிலுமாக நீங்கும். சருமம் அழகு பெறும். பருக்கள் வராது. வெள்ளைப் படுதல் பிரச்னை முழுமையாக நீங்கி விடும். வயிறு தொடர்பான பிரச்னைகளை நீக்கும். மலமிலக்கி யாக செயல்படும்.

தேவையானவை 

உலர்ந்த ரோஜா இதழ்கள் - 6 பூ

பாலிஷ் சேர்க்காத சர்க்கரை - 3-4 டேபிள் ஸ்பூன்

தேன் - ¼ கப்

வெள்ளரி விதை - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

மிக்ஸியில் சர்க்கரை, ரோஜா இதழ் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைக்கவும். அதைக் கண்ணாடி ஜாரில் போட்டு கொள்ளவும். வெள்ளரி விதையையும் இதிலே சேர்க்கவும். 

ஸ்பூனால் நன்கு கலக்கவும். இதில் தேன் ஊற்றி நன்கு கலக்கவும் 48 மணி நேரம் மூடி போட்டு அப்படியே விட்டு விடுங்கள். அவ்வளவு தான் சுவையான ரோஜா குல்கந்து ரெடி. 
ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போது, நன்கு கலக்கி அடியி லிருந்து எடுத்து சாப்பிடலாம். 

குறிப்பு: 

உலர்ந்த ஸ்பூன் பயன் படுத்தினால் குல்கந்து கெடவே கெடாது. பெரியவர்கள் தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம். 1 வயது + குழந்தைகள், தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)