ராகி பாதாம் மில்க் ஷேக் செய்வது எப்படி?





ராகி பாதாம் மில்க் ஷேக் செய்வது எப்படி?

0
பொதுவாக நாம் தினமும் மாலை நேரங்களில் டீ, காபி போன்றவற்றை குடிப்பதை பழக்கமாக வைத்திருப்போம், இனி இதற்கு பதிலாக சற்று வித்தியாசமாகவும் மற்றும் ஆரோக்கிய மாகவும் ராகி மாவை கொண்டு ஏதேனும் பானங்கள் செய்து குடிக்கலாம் வாங்க. 
ராகி பாதாம் மில்க் ஷேக் செய்வது
அதாவது ராகி மாவை கொண்டு வித்தியாசமாக ராகி கூல் மற்றும் ராகி பாதாம் மில்க் ஷேக் செய்து குடிப்பதினால் பசி அடங்கி சுறுசுறுப்பு கிடைப்பதுடன், மேலும் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 2-3 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 1/2 கப்

பாதாம் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

குளிர்ந்த பால் – 2 கப்

சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும், அவற்றில் ராகி மாவை போட்டு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறி விடவும். பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் கெட்டியாக வருமறை கிளறி விடவும்.
ராகி மாவு கெட்டி யானவுடன் அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும். மாவு நன்றாக குளிர்ந்தவுடன், மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, பாதாம் பவுடர், பால் சேர்த்து சிறிது நேரம் அரைக்க வேண்டும்.
பின்பு மிக்சியில் இருந்து அந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால் சுவையுள்ள மற்றும் ஆரோக்கி யமான ராகி பாதாம் மில்க் ஷேக் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)