சிக்கன் பாப்கார்ன் ரெசிபி - Chicken Popcorn Recipe !





சிக்கன் பாப்கார்ன் ரெசிபி - Chicken Popcorn Recipe !

0
மசாலா கலவை மற்றும் மிளகாய் சேர்த்து செய்யப்படும் சிக்கன் பாப்கார்ன் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தை களுக்கு மிகவும் பிடித்த இந்த உணவை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
250 gms சிக்கன் 

2 மேஜைக் கரண்டி கார்ன் ஃப்ளார்

1 முட்டை

1 கப் ப்ரட் க்ரம்ப்ஸ்

1/4 தேக்கரண்டி உப்பு

3/4 மேஜைக் 

கரண்டி இஞ்சி பூண்டு விழுது

1/4 தேக்கரண்டி மிளகு

1/2 தேக்கரண்டி வெங்காய பொடி

3/4 தேக்கரண்டி மிளகாய் தூள்

எண்ணெய்

எப்படி செய்வது 
சிக்கன் பாப்கார்ன் ரெசிபி

ஒரு பௌலில் மிளகாய் தூள், மிளகு, இஞ்சு பூண்டு விழுது, மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். நன்கு கலந்து உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளவும். 

சிக்கனை சிறு துண்டுக ளாக வெட்டி கொள்ளவும். வெட்டி வைத்த சிக்கனை கலந்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன் கார்ன் மாவு சேர்த்து சிக்கன் மேல் தடவி கொள்ளவும். 
மேலும் அதில் முட்டை அல்லது மோர் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒவ்வொரு சிக்கன் துண்டையும் இந்த ப்ரட் க்ரம்பில் தொட்டு எடுக்கவும். பின் அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். 

எண்ணெய் சூடானதும் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும். மொத்தமாக போடாமல் ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும். பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும். பின் கெட்சப்புடன் சேர்த்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)