சுவையான கேரட் பீன்ஸ் சூப் செய்வது எப்படி?





சுவையான கேரட் பீன்ஸ் சூப் செய்வது எப்படி?

0
சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிறந்த மருந்து பீன்ஸ். இந்த நோயால் அதிகம் மக்கள் அவதியுறுகிறார்கள் இதற்கு தீர்வாக பல சிகிச்சைகள் முன்வைக்கப்பட்டாலும் பிரச்சனை என்னவோ அப்படியேதான் இருக்கிறது.
கேரட் பீன்ஸ் சூப் செய்வது

பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.    

ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும். குழந்தைகள் காய்கறி சாப்பிட மறுப்பார்கள். 

அவர்களுக்கு காய்கறிகள் சேர்த்து சூப் செய்து கொடுக்கலாம். கேரட். பீன்ஸ் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் – 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

கேரட் – 1

பீன்ஸ் – 3

கொத்த மல்லி – சிறிதளவு

மிளகு தூள் – தேவைக்கு

உப்பு – தேவையான அளவு

கார்ன் சிப்ஸ் – தேவைக்கு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

கொத்த மல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவை போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வைத்துள்ள காய்கறி களை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, காய்கறிகளை வேக வைத்து, நீரை வடித்து விட்டு காய்கறிகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கிளறி, பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையை ஊற்றி கிளறி, வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கலவை யானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். 

கடைசியாக மிளகு தூள், கொத்தமல்லி, கார்ன் சிப்ஸ் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான கேரட் பீன்ஸ் சூப் ரெடி !
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)