காளானை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?





காளானை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

0
இத்தனை நன்மைகளை வழங்கக் கூடிய காளான் சில கெடுதல் களையும் ஏற்படுத்தக் கூடியது. அலர்ஜியில் தொடங்கி உயிரிழப்பு வரைகூட ஏற்படுத்த கூடியது
காளான் நன்மைகள்
காளான். இதனை சரியாக பயன் படுத்தினால் அருமருந்து அதுவே தவறாக பயன்படுத்தினால் கொடிய விஷம். எப்படிப்பட்ட காளானை சாப்பிடக் கூடாது: 

காளானை சுத்தப் படுத்தும் முன்பு அதனை சுத்தப்படுத்தும் நீரில் சிறிது எலுமிச்சை சாறை கலக்கவும். ஏனெனில் காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறிவிடும். 

எனவே எலுமிச்சைச் சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் கருப்பாவதை தடுக்கிறது. பின்னர் காளானை ஒரு துணியில் பரப்பி அதிலுள்ள ஈரம் காய்ந்தவுடன் சமைக்கவும். 

பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை மூன்று நாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப் படுத்தலாம். ஃப்ரீசரில் வைக்கக் கூடாது. 
காளானை மூன்று நாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம்
பாதி அளவு எடுத்து உபயோகப் படுத்தி விட்டு மறுநாள் மீதியை உபயோகப் படுத்தலாம். ஆனால் திறந்து வைக்கக் கூடாது. அப்படி செய்தால் காளான் கறுத்து விடும்.

ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடி வைத்தால் மூன்று நாள் வரை வைத்து உபயோகப் படுத்தலாம். 

நறுக்கிய பிறகு கூட வைத்திருக்கலாம். சிறிது நிறம் மாறினால் பரவாயில்லை. ஆனால், பிசுபிசுப்பாக மாறினால் உபயோகப் படுத்தக் கூடாது.

காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. 
கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்
காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 
அதே போல, காளானை நன்றாக சமைத்த பிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதனை அனைவரும் சாப்பிட்டு விட முடியாது. 

சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சினைகள் இருக்கும், அப்படிப் பட்டவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)