சேமியா மிளகு பொங்கல் செய்வது எப்படி?





சேமியா மிளகு பொங்கல் செய்வது எப்படி?

0
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. 
சேமியா மிளகு பொங்கல் செய்வது எப்படி?
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். 

பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும். 

நான்கு பூண்டு பல்லுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து, சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டு விட வேண்டும். சரி இனி சேமியா, மிளகு கொண்டு சுவையான சேமியா மிளகு பொங்கல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை: 
வேக வைத்த சேமியா ஒரு கப், 

வேக வைத்த பாசிப்பருப்பு அரை கப், 

கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு (தூளாக்கவும்), 

நெய் 100 கிராம், 

மஞ்சள் தூள் சிறிதளவு, 

உப்பு தேவையான அளவு. 

தாளிக்க: 

முந்திரி 25 கிராம், 

மிளகு (பொடித்தது), சீரகம் தலா அரை டீஸ்பூன், 

கறிவேப்பிலை சிறிதளவு, 

துருவிய இஞ்சி அரை டீஸ்பூன். 

செய்முறை: 

வேக வைத்த பாசிபருப்பு, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள், வேக வைத்த சேமியா ஆகியவற்றை வாணலியில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு மேலும் கிளறவும். 

பிறகு இறக்கி, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்க்கவும். புதினா, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும். சத்தான சுவையான சேமியா மிளகு பொங்கல் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)