ரோஸ் ஃபலூடா ஷாட்ஸ் செய்வது | Rose Falooda Shots Recipe !





ரோஸ் ஃபலூடா ஷாட்ஸ் செய்வது | Rose Falooda Shots Recipe !

0
மழைக்காலம் ஆரம்பித்தாலும் குளுமையான இனிப்பு களை சாப்பிடாமல் இருக்க முடியாது. சுவையான ரோஸ் ஃபலூடா ஷாட்ஸ் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். 
ரோஸ் ஃபலூடா ஷாட்ஸ் செய்வது

தேவையான பொருட்கள்: 

ஃபுல் கிரீம் பால் - 1/2 லிட்டர் 
ரோஸ் மில்க் எசன்ஸ் - 3 துளி 

சர்க்கரை - 5 மேசைக் கரண்டி அல்லது இன்னும் இனிப்பை விரும்பினால் கூடுதலாக சேர்க்கலாம் 

சப்ஜா அல்லது சியா விதைகள் - 3 மேசைக் கரண்டி 

வேக வைத்த சேமியா - 1/2 கப் 

கொட்டைகள், பருப்புகள் - 3 மேசைக் கரண்டி 

வெணிலா ஐஸ்கிரீம் - தேவைக்கேற்ப 

செய்முறை: 

பாலைக் கொதிக்க வைத்து, சிம்மில் மேலும் பத்து நிமிடங்கள் வைத்துக் கொள்ளவும். அதில் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை கலக்கவும். பிறகு ரோஸ் மில்க் எசன்ஸைச் சேர்த்து, கலக்கி, ஃப்ரிட்ஜில் வைக்கவும் .
ரோஸ் ஃபலூடா ஷாட்ஸ்

சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து, அதன் நிறம் மாறும் வரை வைத்திருக்கவும். வேக வைத்த சேமியாவையும் தயாராக வைத்துக் கொள்ளவும் 
பருப்புகளைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இப்போது சின்ன கண்ணாடி கப்புகளை எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த சப்ஜா விதைகளை மற்றும் சேமியாவைச் சேர்த்து, அதன் பிறகு ரோஸ் மில்க்கை கிளாஸின் முக்கால் பாகம் வரை நிரப்பவும். 

கடைசியாக, ஒரு ஸ்கூப் வெணிலா ஐஸ்கிரீமை மேலே வைத்து, அதன் மேல் வறுத்த கொட்டைகள், பருப்புகளைத் தூவி பரிமாறவும். குளிர்ச்சி யான சுவையான ரோஸ் ஃபலூடா ஷாட்களை சுவைத்து மகிழுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)