சுவையான நேந்திரம் பழம் ஸ்வீட் செய்வது எப்படி?





சுவையான நேந்திரம் பழம் ஸ்வீட் செய்வது எப்படி?

0
நேந்திரம் பழம் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்கின்றது. 
சுவையான நேந்திரம் பழம் ஸ்வீட் செய்வது எப்படி?
மேலும் உடல் பலவீனமாக இருப்பவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், உடல் மெலிந்து இருப்போர் ஆகியோர் நேந்திரம் பழத்தினை தினமும் எடுத்து வந்தால் உடல் எடை நிச்சயம் கூடும். 

குழந்தைகளுக்கு 6 மாதங்கள் முதல் உணவு கொடுக்க ஆரம்பிக்கும் போது நேந்திரம் பழத்தினை வேகவைத்து நெய் சேர்த்துக் கொடுத்தால் குண்டாவார்கள். 
மேலும் இது ஞாபக சக்தியினை அதிகரிப்பதாகவும், உடலினை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுவதாகவும் உள்ளது. 

அதே போல் இருமல் பிரச்சினை இருப்பவர்கள் நேந்திரம் பழத்தினை பாலுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் நிரந்தரத் தீர்வினைப் பெறலாம்.

கேரளத்திலும், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. 

சரி இனி நேந்திரம் பழம் கொண்டு சுவையான நேந்திரம் பழம் ஸ்வீட் செய்வது எப்படி?  என்று பார்ப்போம். 
தேவையானவை : 

பழுத்த நேந்திரம் பழம் – ஒன்று (தோல் நீக்கி, 

பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவுவது போல நீளவாக்கில் சீவவும்) 

தேங்காய்த் துருவல் – கால் கப் 

முந்திரி, திராட்சை – தேவையான அளவு 

நெய் – சிறிதளவு. 
செய்முறை: 
சுவையான நேந்திரம் பழம் ஸ்வீட் செய்வது எப்படி?
அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் நெய் விட்டு பழத்துண்டு களை வைத்து டோஸ்ட் செய்து எடுக்கவும். 
அதே பாத்திரத்தில் மேலும் கொஞ்சம் நெய் விட்டு தேங்காய்த் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும். 

பழத்துண்டுகளின் மீது தேங்காய்க் கலவை வைத்துச் சுருட்டிப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)