ஆரோக்கியம் தரும் வெந்தய தோசை செய்வது எப்படி?





ஆரோக்கியம் தரும் வெந்தய தோசை செய்வது எப்படி?

0
வெந்தயம் என்றாலே உடல் குளிர்ச்சி தான் நினைவுக்கு வரும். வெந்தயம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். 
ஆரோக்கியம் தரும் வெந்தய தோசை செய்வது எப்படி?
கருமுட்டை வளர்ச்சிக்கு உதவும். மூட்டுவலி, வீக்கம் போன்ற வற்றைச் சரி செய்யும். வெந்தயம் குளிர்ச்சி, கொள்ளு உஷ்ணம். 
ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வெந்தயத்தை அரைத்து, மாவுடன் சேர்த்துத் தோசை சுடலாம். 

தேவையான பொருட்கள்: 

இட்லி அரிசி – 1 1 /2 கப் 

வெந்தயம் – 1 / 4 கப் 

உளுந்து – 1 /2 கப் 
செய்முறை: 
ஆரோக்கியம் தரும் வெந்தய தோசை செய்வது எப்படி?
ஒரு பவுலில் அரிசி, வெந்தயம், உளுந்து  எடுத்து தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு இதை மிக்ஸியில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும். 
அரைத்த எடுத்த மாவில் உப்பு போட்டு நன்கு கையால் கரைத்து 8 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
மாவு நன்கு புளித்து வந்த பிறகு அடுப்பில் தோசை கல் வைத்து எண்ணெய் லேசாக தடவி மாவு எடுத்து ஊற்றி மீடியமாக தேய்த்து சுற்றி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

தோசையை திருப்பி போடாமல் மூடி வைத்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். சுவையான பஞ்சு போன்ற வெந்தய தோசை தயார். 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)