ருசியான பனானா சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?





ருசியான பனானா சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

0
ஐஸ்கிரீம் என்பது உணவுகளின் கடவுள். ஐஸ்கிரீமை பார்த்தால் பெரியவர்களும் குழந்தைகளாகி விடுவார்கள். மேற்கண்ட கூற்றுகளை ஆராய்ச்சிகளும் நிரூபிக்கின்றன. 
ருசியான பனானா சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
ஐஸ்கிரீம் சாப்பிட்டால் மூளை புத்துணர்ச்சி அடைந்து உங்கள் சோகத்தை மறக்கச் செய்து மகிழ்ச்சி யாக்கும். 

உங்களுக்கு ஏதேனும் கோபம், சோர்வு இருந்தால் ஒரு ஐஸ்கிரீமை வாங்கி ரசித்து ருசித்து சாப்பிட்டுப் பாருங்கள். சோர்வு கோபம் பறந்து போகும். 
ஐஸ்கிரீமில் அதிக கலோரி, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு இருப்பதால் தினமும் தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 

இதில் எந்த வித ஊட்டச் சத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வீட்டில் நம் தேவைக்கு ஏற்ப மூலப்பெருட்களைச் சேர்த்து ஆரோக்கியமாக சுவைக்கலாம்.
தேவையான பொருட்கள்:

பெரிய வாழைப்பழம் - 3

கருப்பு பேரிட்சை - 12

கோகோ பவுடர் - 2 ஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

ஏலக்காய் - ஒரு சிட்டிகை
செய்முறை : 
ருசியான பனானா சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?
கருப்பு பேரிட்சையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய பின்பு கொட்டை நீக்கி சதையை தனியாக எடுத்துக் கொள்ளவும்.

வாழைப் பழத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய வாழைப் பழத்தை சேர்த்து அரைக்கவும். 
மிக்ஸியில் வாழைப் பழத்துடன் பேரிட்சை சேர்த்து அரைக்கவும். அடுத்ததாக கோகோ பவுடர், உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து மைய அரைக்கவும். 

அரைத்ததும் அதை ஒரு கண்ணாடி டப்பாவில் ஊற்றி ஃபிரீசரில் வைக்கவும். ஐஸ்கிரீம் பதத்திற்கு உறைந்ததும், தேவைப் பட்டால் பிஸ்தா, பாதாமை உடைத்து அதன் மேல் தூவலாம். 

சுவையான பனானா சாக்லெட் ஐஸ்கிரீம் தயார்.
குறிப்பு :

இதில் சேர்க்கப்பட்ட வாழைப்பழம் மற்றும் பேரிட்சை உடலுக்கு பல ஊட்டச் சத்துகளை கொடுக்கக் கூடியவை என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)