சம்மரில் மிஸ் பண்ணக்கூடாத நீர் சத்து உணவுப் பொருட்கள் !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
கோடை காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம். வெப்பம் காரணமாக உடலில் அதிக படியான வியர்வை வெளியேறும்.
நீர் சத்து உணவுப் பொருட்கள்
இதன் விளைவாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டு விடும். அதனால் வெயில் காலத்தில் நீர்சத்துகள் நிறைந்த உணவு களை எடுத்துக் கொள்வது நல்லது.

தர்பூசணி :

தர்பூசணியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட பல முக்கிய உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன.
துணிச்சலாக சில்மிஷம் செய்த பயிற்சியாளரை சிக்க வைத்த சிறுமி !
154 கிராம் எடையுள்ள தர்பூசணி பழத்தில் 118 மி.லி. தண்ணீர் நிறைந்துள்ளது. தர்பூசணிகள் மிகக் குறைவான கலோரி களைக் கொண்டுள்ளன. 
தர்பூசணி
அதனால் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் லிகோபீன் நிறைந்துள்ள தால் இதய நோய், நீரிழிவு நோய் ஏற்படுவதை குறைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவுகிறது.
வெள்ளரிக்காய்:

வெள்ளரியில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இவற்றில் மிகக் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. 52 கிராம் எடையுள்ள வெள்ளரியில், 8 கலோரிகள் மட்டுமே இருக்கிறது. இதில் வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. 
வெள்ளரிக்காய்

ஃபைபர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த இந்த வெள்ளரிகாய், மலச்சிக்கல் மற்றும் அடங்காத தாகம் இரண்டையும் சரி செய்யும் வல்லமை யுடையது. இதை உப்பு அல்லது மிளகாய் தூள் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

தக்காளி:

தக்காளியில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. இதில் குறைந்த கலோரிளே இருக்கின்றன. 149 கிராம் எடையுள்ள தக்காளிகளில் 32 கலோரிகள் தான் கிடைக்கும். 
தக்காளி
மேலும் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட், லிகோபீன், நார்ச்சத்துகள் நிறைந்துள்ள தால் இதய நோய் வரும் அபாயத்தை குறைக்கும் என ஆய்வுகளில் கூறப் பட்டுள்ளது.
தயிர்:

இது உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சியை தடுக்கும் திறன் கொண்டது. மேலும் இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள், எலும்பு ஆரோக்கி யத்தை மேம்படுத்த உதவுகின்றன. 
தயிர்

இது புரதம் நிறைந்த உணவாக இருப்பதினால் உடல் எடையை குறைக்க உதவும். இதனை மசாலா மோராகவும், லஸ்ஸியாகவும், தயிர் பச்சடியாகவும் செய்து சாப்பிடலாம்.

ஸ்ட்ராபெரி :

ஸ்ட்ராபெரியில் 91% தண்ணீர் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட உடலுக்குத் தேவையான நார்ச் சத்துகளும் அடங்கி யுள்ளன. 
ஸ்ட்ராபெரி
நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய், நீரிழிவு, அல்சைமர் மற்றும் புற்றுநோய் ஆகியவை வராமல் தடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் :

பொட்டாசியம் நிறைந்தது. கோடையில் வெப்பம் காரணமாக நாம் உடலின் சத்துகள் முழுவதையும் வியர்வை மூலம் இழக்க நேரிடும். அந்த நேரத்தில் இதனை சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகள் கிடைக்கும். 
ஆரஞ்சு பழம்

மேலும் ஆரஞ்சு பழத்தில் ஏறக்குறைய 90 சதவிகிதம் தண்ணீர் தான் உள்ளது. அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உட்கொள்ளா லாம். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ள தால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
வாழை பழங்கள்:

ஆரஞ்சு பழத்தைப் போல வாழை பழங்களும் பொட்டாசியம் நிறைந்தவை. இதில் உள்ள அமிலத் தன்மை தோலழற்சியை கட்டுப் படுத்தவும் உதவும். 
வாழை பழங்கள்
அதனால் வெயில் காலத்தில் ஏற்படும் சரும கோளாறுகள் மற்றும் வியர்குரு ஏற்படாமல் பாதுகாக்கும்.
சம்மரில் மிஸ் பண்ணக்கூடாத நீர் சத்து உணவுப் பொருட்கள் ! சம்மரில் மிஸ் பண்ணக்கூடாத நீர் சத்து உணவுப் பொருட்கள் ! Reviewed by Fakrudeen Ali Ahamed on June 13, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚