சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
சீஸ் ( பாலாடைக் கட்டி ) என்பது தமிழர்களு க்கு புதிய வரவே. இன்று அது இல்லாத வீட்டு ஃபிரிஜ்களே இல்லை. அந்த அளவிற்கு சீஸ் மீதான பிரியம் அதிகரித் துள்ளது.
சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

எந்த சாட் உணவாக இருந்தாலும் அதில் சீஸ் பஸ்டர் என்னும் கான்சப்டில் அந்த உணவி லிருந்து ஒரு கடி கடித்தாலே ஒழுகு மளவிற்கு சீஸை ரசித்து ருசிக்கின்றனர்.

சீஸ் எட்டாம் நூற்றாண் டிலேயே எகிப்தியர்க ளால் தயாரிக்கப்பட்ட உணவாகும். இதில் மொத்தம் 1829 வகையான சீஸ்கள் உள்ளன. அவை மணம், சுவை, நிறம், வடிவம், அளவு விலை என வேறு படுகின்றன.

இதில் 17 வகையான சீஸ்கள் மட்டுமே இந்தியாவில் கிடைக்கின்றன. அவை உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் பல நன்மை களையும் அளிக்கின்றன.

சீஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

எலும்புகளுக்கு உறுதி : சீஸில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளின் உறுதித் தன்மை பலப்படும். கூடுதலாக இருக்கும் விட்டமின் B சத்து கால்சியத்தை எலும்புகள் உறிஞ்சுவதற்கு ஏதுவாகிறது. 

அதிகமான ஊட்டச் சத்துகளும் இருப்பதால் இதைத் தினமும் உண்பதும் நல்லது என்கின்றனர். கர்ப்பிணிகள், வளரும் சிறுவர்கள் இந்த சீஸை உண்டால் பல நன்மைகள் உண்டு. 

இதயம் : 

இதயத்தின் செயல்பாடுகளை வேகப் படுத்தும் தன்மை சீஸிற்கு உண்டு. இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய மினரல் சத்துகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள

எலும்புப் புரையைத் தடுக்கும் : 

கால்சியம் குறைபாட்டால் உருவாகக் கூடிய எலும்புப்புரை பிரச்னைக்கு சீஸ் நல்லத் தீர்வாகும். இதில் உள்ள பொட்டாசியம், கால்சியம், உயிர்ச் சத்துகள், மினரல்கள் எலும்புகள் அரித்து பலவீன மாவதைத் தடுக்கும்.

ஆரோக்கியமான உடல் எடை : 

இதில் உள்ள கொழுப்பு உடல் எடையைக் கட்டுக் கோப்பாக வைக்க உதவும். குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் மற்ற ஊட்டச் சத்துகள் ஆரோக்கிய மான, வலுவான சதைப் பிடிப்பை உருவாக்கும்.

புற்று நோய் கொல்லி : 

சீஸ் வெறும் சத்துகளை மட்டும் உள்ளடக்கியது கிடையாது. நச்சுத் தன்மையை நீக்கக் கூடிய அமிலங் களையும் உள்ளடக்கியது. புற்றுநோய் உருவாக்கம் தெரிந்தாலே அதை அழிக்கும் ஆண்டி ஆக்ஸிடண் டாகச் செயல்படும்.

பற்கள் பலப்படும் : 

கால்சியம் எலும்புகளுக்கு மட்டுமல்ல பற்களின் உறுதிக்கும் உதவும். கூடுதலாக இதில் இருக்கும் பாஸ்பரஸும் பற்களுக்கு வலு சேர்க்கும்.

மூளை செயல்பாடு அதிகரிக்கும் : 
மூளை செயல்பாடு அதிகரிக்கும்

சீஸில் இருக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உங்கள் மூளையின் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பா க்கும்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் : 

இதில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் உடலுக்கு எந்த நோய்த் தொற்று வந்தாலும் சண்டை யிட்டுத் துரத்தி அடிக்கும் வல்லமை கொண்டது.
சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? சீஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? Reviewed by Fakrudeen Ali Ahamed on June 13, 2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚