அருமையான ஸ்பெகடி செய்வது எப்படி?





அருமையான ஸ்பெகடி செய்வது எப்படி?

0
நமக்கு பிடித்தமான உணவு என்று வரும் போது, அதில் பாஸ்தா போன்ற திருப்திகரமான உணவும் இடம் பெறும். ஸ்பாகெட்டி, டார்டெல்லினி, அல்லது லாசக்னா ஆகிய வேக வைத்த பாஸ்தா வகைகள் எல்லாமுமே நமக்கு பிடிக்கும். 
அருமையான ஸ்பெகடி செய்வது எப்படி?
சரியான சாஸுடன் இணைந்து, காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து தயாரித்தால் மிக அற்புதமான சுவையை இது தரும். பாஸ்தாவை உலக அளவில் அதிக அளவிலான உணவுப் பிரியர்கள் சாப்பிட்டு வருகின்றனர். 

நியூகேஸ்ட்டில் பல்கலைக் கழகத்தின் ஊட்டச்சத்து நிபுணரான எம்மா பெக்கெட் கூறுகையில், தினசரி பாஸ்தாவை சாப்பிடுபவர்கள் அதிக எடையைக் குறைக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

மேலும், பாஸ்தாவை முழுவதுமாக சாப்பிடாமல் இருப்பதற்கு பதிலாக, பொதுமான அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்று பரிந்துரைக்கிறார். 

மேலும், முழுதானியத்தால் தயாரித்த பாஸ்தாவிற்கு மாறினால், அதன் பலனை இன்னும் உயர்த்தி, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று கூறுகிறார். 

தேவையானவை: 

ஸ்பெகடி (குச்சி போல் இருக்கும் – டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – கால் பாக்கெட், 

பேஸிக் பவுடர் – அரை டீஸ்பூன், 

நசுக்கிய பூண்டு – ஒரு டீஸ்பூன், 

மிளகுத் தூள் – அரை டீஸ்பூன், 

பாஸ்தா சாஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 4 டேபிள் ஸ்பூன், 

துருவிய சீஸ் – அரை கப், 

ஆலிவ் ஆயில் (அ) சூரியகாந்தி எண்ணெய் – 2 டீஸ்பூன், 

 உப்பு – தேவையான அளவு. 
செய்முறை: 

ஸ்பெகடியை உடைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசவும். 

கடாயில் எண்ணெய் விட்டு பேஸிக் பவுடர், பூண்டு, மிளகுத் தூள், பாஸ்தா சாஸ் சேர்த்து புரட்டி, வேக வைத்த ஸ்பெகடியை சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியில் சீஸ் சேர்த்து இறக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)